கடலில்தத்தளித்துக்கொண்டிருந்த30ஈரானியவீரர்களைமீட்டஇலங்கை…
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்துவரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கடற்பகுதிகளில் வலம் வரும் ஈரானிய போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கி வருகின்றன.இதுவரை, ஈரானின் 17 போர்க்கப்பல்கள் தாக்கப்பட்டு,
மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அருகே அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.இலங்கை கடல் எல்லைக்கு அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில், ஈரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்று, 4/3/26 காலை மூழ்கியுள்ளது. ஐரிஸ் டெனா என்ற அந்த கப்பல், ஃப்ரிகேட் வகை போர்க்கப்பல் என கூறப்படுகிறது.இந்த கப்பல் மூழ்குவதாகவும், உடனடியாக உதவி தேவை என்றும், கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையிடம் உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து, 2 கடற்படை கப்பல்கள், ஒரு விமானத்துடன் அங்கு விரைந்த இலங்கை கடற்படையினர்,கடலில்தத்தளித்துக்கொண்டிருந்த30ஈரானியவீரர்களைமீட்டதாகதெரிவிக்கப்படுகிறது.மேலும்,கப்பலில்இருந்த101பேரைகாணவில்லைஎன்றும்தகவல்வெளியாகியுள்ளது.இந்தசம்பவத்தை,இலங்கைகடற்படைசெய்தித்தொடர்பாளர்புத்திகசம்பத்உறுதிசெய்துள்ளார்.இந்தகப்பல்எப்படிமூழ்கியதுஎன்பதுபற்றியசரியானதகவல்இன்னும்வெளியாகவில்லை.இதனிடையே, இலங்கையில் இருந்து 40கடல்மைல்தொலைவில்ஈரான்போர்க்கப்பல்சென்றபோது, அது தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சென்ற அந்தகப்பல்மீதுஅமெரிக்கநீர்மூழ்கிக்கப்பல்தாக்குதல்நடத்தியதாககூறப்படுகிறது.இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறைஅமைச்சர்விஜிதாஹெராத் நாடாளுமன்றத்தில்விளக்கம்அளித்துள்ளார்.அதன்படி,180மாலுமிகளுடன்இருந்தஈரானின்கப்பல்மூழ்கியதாகவும்,அதில்30பேர்காயமடை்நததாகவும்,அவர்களைமீட்டுஇலங்கையின்மருத்துவமனையில்அனுமதித்துள்ளதாகவும்அவர்விளக்கமளித்துள்ளார்.இதனிடையே, ஈரானின் போர்க்கப்பல் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளால் குண்டுவீசி தாக்கப்பட்டதா என இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்கு ஆளும் அரசு சார்பில் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.