எஸ். எஸ். பிரியாணி கடையில் சாப்பிட்ட பலருக்கு வாந்தி, பேதி .?

அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு!!
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியில் எஸ். எஸ். பிரியாணி கடைக்கு உணவு தயாரிக்கும் உணவு கூடம் உள்ளது.இங்கு தயாரிக்கப்பட்ட பிரியாணி 40க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.கடந்த 16ஆம் தேதி சென்னை கொடுங்கையூர் சிட்கோ பிரதான சாலையில் உள்ள எஸ். எஸ். பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உட்பட்டபல்வேறுஉடல்உபாதைகள்ஏற்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.மேலும் 10க்கும் மேற்பட்டோர்தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.உடல்நலம் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் இது குறித்து கொடுங்கையூர் போலீசில் புகார்அளித்தனர்.இந்த நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி. சதீஷ்குமார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர். இளங்கோ தலைமையிலான அதிகாரிகள்சம்பந்தப்பட்டஉணவுவிடுதியைஆய்வுமேற்கொண்டார்கள்.ஹோட்டலில் உணவு தயாரிப்புக்கான பொருட்கள் எதுவும் இல்லாததால் பிரியாணி தயாரிக்கும் அலமாதியில் உள்ள சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.இதே போல் பொன்னேரி பகுதியில் உள்ள எஸ். எஸ்.பிரியாணி கடையிலும் சிலருக்கு வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.ஆகவே எஸ். எஸ். பிரியாணி கடையின் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை தீவிரமாக ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்றுமாலைஉணவுஉட்கொண்ட50க்கும்மேற்பட்டநபர்களுக்குவாந்தி,மயக்கம் ஏற்பட்டுபல்வேறுமருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறைநடவடிக்கைஎடுக்காமல்3நாட்களாககாலம்தாழ்த்திவருகின்றனர்.மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு 10,000 முதல் 25,000/- வரை பைசல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.சிறியவர் முதல் பெரியவர் வரை உயிரிக்கு போராடும் வேலையிலும் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையையும், காசுக்கு விலைபோன ஊடக நபர்களையும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்