எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு….
பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒன்றிய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதனை மேலும் கூடுதலாக பலப்படுத்தும் விதமாக Z+ பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி முதற்கட்டமாக 12 காவல் spg வீரர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வரும் 7-ம் தேதிமுதல்தமிழகம்முழுவதும்எடப்பாடிபழனிசாமிசுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு கோவை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் Z+ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.