fbpx
Others

உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ..சிறப்பு செய்தி.

மலேசியா நாட்டின் பெட்டாலியன் ஜெயா தனியார் ரெஸ்டாரண்டில் உலகளாவிய சிலம்ப துவக்குனர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மாசிலாமணி முன்னாள் மலேசியா சிலம்பக்கழக தலைவர். விஸ்வலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு.சிறப்பு அழைப்பாளராகவி.ஜிபி.உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர். வி.ஜி. சந்தோஷம் மலேசியா சிலம்பக் கழக நிறுவனத்தலைவர்டத்தோ. காந்தன் கலந்து கொண்டனர்.நாட்டின் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக சிலம்பம் இருந்தாலும் உரிய அளவில் சலுகைகள், பலன்கள் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.மலேசியாவில் சிலம்பம் இந்தியர்களின் விளையாட்டாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.பள்ளி விளையாட்டாக நடத்தப்படுகிறது..இதே போல் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் நடத்தப்படுகிறது.உரிய சலுகைகள் கிடைக்கவில்லை.அதை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் உலக அளவில் சிலம்ப வளர்ச்சிக்கு உரிய ஏற்பாட்டை செய்யவும்,2036 இல் இந்தியாவில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் இடம் பெற உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர் முருகக்கனி தெரிவித்தார். விரைவில் சர்வதேச அளவில் நாடுகளை சிலம்ப விளையாட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசிலாமணி தெரிவித்தார்.சிலம்ப வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று வி.ஜி.சந்தோஷம் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மலேசியா போர்க்கலை சகவம்ப நிறுவன தலைவர். முரளிதரன் மலாக்கா மாநில தலைவர். சுரேஷ், மகா குரு. கன்னியப்பன் எழுத்தாளர். ராஜேந்திரன்,மல்லை சத்யா, தமிழ்நாடுசிலம்ப பேரவை தலைவர் ஈசன், இந்திய சிலம்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா சான்டோ.ரத்தினம், சந்திரசேகர், இந்ரஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close