உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லா கட்டும்விதமேதனி…..சிறப்பு செய்தி..




வேலூர் இராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்றஒருங்கிணைந்தமாவட்டங்களுக்கு தலைமையிடமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ளது தான் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இந்த அலுவலகத்தின் பணிகள் சிறிய உணவகங்கள் முதல் ஸ்டார் உணவகங்கள் போன்றவற்றில் தயாரிக்கப்படும் உணவுகள் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுகின்றதா இதே போல தயாரிக்கப்படும் உணவுகளில் வாய் ருசிக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களை ஈர்க்க தயாரிக்கும் உணவு வகைகளில் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகிறதா, அசைவ ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பல நாட்களாக பதப்படுத்தப்படும் கறி மீன் வகைகள், தரமற்ற எண்ணெய் வகைகள்,போன்றவற்றை சோதனை செய்வது, அதே போல பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கார வகைகள் இனிப்பு வகைகள் மற்றும் இதர வகைகளில் தயாரிக்கப்படும் பொருட்களில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதா, தயாரிக்கும் இடங்கள் தயாரிப்பாளர்கள் தூய்மையை கடைப்பிடிக்கிறார்களா என்று கண்காணிக்கவும், இறைச்சிக்கூடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராணிகள் நோய்த்தொற்று அற்றவையா மற்றும் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறதா, தயிர் மோர் தயாரிக்கும் நிறுவனங்களில் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றதா, பழங்கள் மார்க்கெட்டில் ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழங்கள் உருவாக்கப்படுகிறதா போன்றவற்றை ஆய்வு செய்வதும், மளிகை கடைகளில் தேதி காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகின்றதா, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்கள் தரமற்றவையா அவைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உரிமம் சான்று பெற்றுள்ளனவா போன்றவைகள் ஆய்வு செய்வதுதான் ஆனால் எதையும் ஆய்வு செய்யாமல் சோதனை என்ற பெயரில் சிறிய அபராதம் என்ற சொல்லுக்கு ஓரிரு கடைகள் மட்டுமே, மற்றவை அனைத்திலும் மாதம் மாதம் 10 ஆயிரம் முதல்25 ஆயிரம் வரை கடைகளுக்கு ஏற்றார் போல் கட்டிங் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஜாலியாக காலத்தை கழிப்பது தான் இந்த துறையைச் சார்ந்த அலுவலர்களின் வேலை குறிப்பாக இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் பகல் நேரங்களில் உள்ளஸ்டார் அசைவ ஹோட்டல்கள் இருந்தாலும் அவைகள் யாவும் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் பின்பற்றுவதில்லை, அதேபோல இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் எண்ணற்ற கறி வகைகள் விற்கும் தள்ளுவண்டி கடைகள் ஏராளம், அவர்கள் இறைச்சியுடன் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பல வாசனை பொருட்களையும், ப ல நாட்களாக பத படுத்தப்பட்ட இறைச்சிகளைவா டிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர் இதனால் இதை உண்பவர்களுக்கு கேன்சர் மற்றும் பலவித நோய்கள் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், இதே நிலைதான் மற்ற மாவட்டங்களிலும் நீடிக்கிறது, இதைப் பற்றி இந்தத் துறை கண்டு கொள்வதே கிடையாது ஏனென்றால் ஹோட்டல்கள் சாலை சிற்றுண்டிகள் அனைத்திலும் இவர்களுக்குசேர வேண்டிய கட்டிங் சரியாக சென்றடைவதால் கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர், யாராவது பாதிக்க பட்டோர் புகார் அளித்தால் கண்துடைப்பு நாடகமாக சோதனை மேற்கொண்டு கொண்டு நடவடிக்கை என்ற பெயரில் பெரிய தொகை பேரம் பேசிசிறிய தொகைஅபராதம் விதித்து பெரிய தொகையை வசூல் செய்து எடுத்துக் கொள்கின்றனர்எனகுற்றம்சாட்டுகின்றனர், இதனால் சாலையோர கடைகள் பெருகுவதுடன் அவர்கள் தரும் தரமற்ற உணவு உண்பதினால் நோய்கள் அதிகமாக பெருக வாய்ப்பு உள்ளன, புகார் தெரிவிக்க அலுவலக தொலைபேசி தொடர்பு கொண்டால் தொலைபேசி எடுப்பதில்லை,இவர்களின் செயல்பாடுகளால் சிற்றுண்டி முதல் ஸ்டார் ஹோட்டல் வரை கண்டதை பொது மக்களுக்கு கொடுத்து பணத்தை சம்பாதிக்கின்றனர்,உணவுதரம்பற்றிதெரிவிக்கஅலுவலகம்சென்றால்அங்கேஅதிகாரிகள் காணப்படுவதில்லை கேட்டால் அதிகாரிகள் மூன்று மாவட்டங்களை பார்க்க வேண்டும் அதனால் அவர்களை எப்போது வந்தாலும் பார்க்க முடியாது இன்று தெனாவட்டலாக பதில் கூறுகின்றனர், துறையைச் சார்ந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாக்கெட் நிரப்புகிறார்கள் தவிர உணவில் கலப்படம் செய்வதை தடுக்க முடிவதில்லை, இந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தங்கள் உறவினர் பெயர்களில் பல மடங்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர், லஞ்சம் பெறுவதையே குறிக்கோளாக வைத்து செயல்படும் இவர்களை மூன்று மாவட்டங்களிலும்எண்ணற்றகடைகளில்தரமற்றஉணவுபொருட்கள்காணப்படுகின்றன, இதுபோன்று லஞ்சம் வாங்கிக் கொண்டு தரமற்ற உணவுகளை தயாரிப்போருக்கும் நிறுவனங்களுக்கும் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளை இனம் கண்டு இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டால் பொதுமக்களின் சுகாதாரம் சீரடையும், அது மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கு ஒரு உணவு பாதுகாப்பு அலுவலகம் அமைத்து தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது, இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும்3 மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு மூன்று மாவட்டங்களிலும் செயல்படும் தரமற்ற உணவு வழங்கும் ஓட்டல்கள் மூடப்படுமாஅவர்களுக்குஉறுதுணையாகசெயல்படும்லஞ்சப்பேர்வழிகள்தண்டிக்கப்படுவார்களா இதனால் மனித நலன் காக்கப்படுமா பார்ப்போம். கண்டு கொள்ளாத லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்…?