fbpx
RETamil News

தமிழகத்தில் நோய் அறிகுறி தென்படாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது – மக்களுக்கு கவனம் தேவை முதல்வர் பழனிச்சாமி

தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2-வது முறையாக ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையை அடுத்து முதல்வர் – பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;

கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்பட தொடங்க உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4612 பேருக்கு கொரோனா ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை தமிழகத்தில் 561 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயாரான நிலையில் உள்ளன.

தற்போது தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோய் அறிகுறி இல்லாமலேயே கொரோன வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடி அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து முதற்கட்ட நிதியாக தமிழகத்திற்கு 500 கோடி ரூபாய் வந்துள்ளது.

21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளி தேர்வுகள் குறித்து முடிவய எடுக்கப்படும்.

மக்களை துன்புறுத்தி ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த முடியாது. மக்களை சிரமம் படுத்தாமல் அரசு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close