fbpx
Others

ஈரோடு–புளியம்பட்டி கால்நடை சந்தையில் மாடுகள் விலை உயர்வு….?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. பரவலாக மழை பெய்துள் ளதால், தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் கால்நடைகளை வாங்க, விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 220 ஜெர்சி மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எருமை, 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர்.அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 கிலோ வெள்ளாடு, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரை விற்பனையானது.. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close