fbpx
Others

ஈரோடு-பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 900 கன அடி நீர் திறப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் பவானி ஆறும், மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது.இந்தநிலையில் மழை இல்லாததால்அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இருந்தாலும் பாசனங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப் பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.73 அடியாக இருந்தது. இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 934 கன அடியாக வந்து கொண்டிருந்தது.
பவானி ஆற்றில் தடப்பள்ளிஅரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. மொத்தம் பவானிசாகர் அணையிலி ருந்து பாசனத்திற்கு 900 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close