Others
ஈரோடு–தாளவாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, வனச்சரகத்துக்குட்பட்ட ஒசூர் “கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா (வயது 38). இவர் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தோட்டத்தில் புகுந்த 2-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மக்காச்சோளம் பயிரை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற விவசாயி அப்துல்லா இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் 1 ஏக்கர் மக்காச் சோளம் பயிர் சேதம் அடைந்துள்ளது. இதற்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்