Others
ஈரானின்உச்சபட்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு….
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதிபடுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்கு புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின்மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில்,ஈரானின் உச்சபட்ச தலைவராகஅயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.