இவிஎம் குறித்தகருத்து–ஆதரிக்கும் இண்டியா கூட்டணி – எதிர்க்கும் பாஜக

இருவரின் விவாதத்துக்கு மத்தியில் இண்டியா கூட்டணி தலைவர்களும் இவிஎம் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய யாரும்
அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படாததால்நமதுஜனநாயகம்கேலிக்கூத்தாக்கப்படுகிறது.தேர்தல்நடைமுறையில்உள்ளவெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மோசடி மூலம் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டப்படும் ஆபத்து உள்ளது.” என அச்சம்தெரிவித்தார் தொடர்ந்து எலான் மஸ்க் பதிவை மேற்கோள்கட்டி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “தொழில்நுட்பம் என்பது சிக்கல்களை நீக்குவது. அவை பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தால், அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் பல தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடையும் அபாயங்கள் கொடிகட்டிப் பறக்கும்போதும், நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த ஆபத்துக்களை மேற்கோள்கட்டும்போது ஏன் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதில் குறியாக இருக்கிறீர்கள் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ராஜ்யசபா எம்.பி.யும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவருமான பிரியங்கா சதுர்வேதி, “இது மிக உயர்ந்த மட்டத்தில் நடக்கும் ஒரு மோசடி. இன்னும் தேர்தல் ஆணையம் தூங்குகிறது” என்று விமர்சித்துள்ளார்.