(15/09/2022) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களின் நலனுக்காக தமிழ்நாடு காவல் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் முனைவர் .சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபாசத்தியன் இ.கா.ப அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) திரு. முத்து கருப்பன் ( இனையவழி குற்ற பிரிவு), அவர்கள், இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு .சீனிவாசன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சதிஷ் குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.