fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சிசிடிவி மூலம் 10,11,12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் கண்காணிக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அதிரடி!

தற்போது தொடங்க இருக்கும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொது தேர்வுகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கத்தான் பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

முதல்படியாக அதிக கண்காணிப்பு தேவைப்படும் தேர்வு மையங்களில் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இதன்முலம் அந்த தேர்வு மையங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும். தற்போதுவரை 3000 தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுவிட்டுள்ளது. இது மேலும் 100 மையங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

எனவே அடுத்த ஆண்டு முதல் அனைத்து மையங்கலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பறக்கும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வின்போது முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்யவே கல்வித்துறை இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close