fbpx
Others

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த-எடப்பாடி பழனிசாமி..

There is no 100% chance of reintegrating those working against AIADMK into  the party - Edappadi Palaniswami Interview | அதிமுகவுக்கு எதிராக  செயல்படுபவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க 100 ...தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் முதல் ஆளாக உள்ள அதிமுக, தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்கூட்டம்நடைபெற்றது.இந்தகூட்டத்திற்கு  பிறகுசெய்தியாளர்களிடம்பேசியஅதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.1) சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டுவரும்சமூகப்பாதுகாப்புஓய்வூதியம்ரூ.1,200இருந்துரூ.2,000ஆகஉயர்த்திவழங்கப்படும்.2) மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில்பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.3 )வாழ்வாதார உதவியாக, அரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 ) கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.4 ) தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்கநேரிட்டால்,அவர்களதுகுடும்பத்தினருக்குரூ.10லட்சம்வழங்கப்படும்.அதேபோல்,  படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.மேலும் அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டுவருகின்றஆன்லைன்முறைரத்துசெய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும். 5 ) அ) இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.ஆ) மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.  குல விளக்கு திட்டம் -அனைத்து குடும்ப அட்டைஉடையகுடும்பங்களுக்கும்மாதம்ரூ.2,000உதவித்தொகைவழங்கப்படும்.ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நாட்களை உயர்த்துதல் தற்போதைய 125 நாட்களிலிருந்து 150 நாட்களாக வேலை உறுதித் திட்டத்தை நீட்டிக்கப்படும்.அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

Related Articles

Back to top button
Close
Close