fbpx
Others

‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ பாதிப்பு கோவையில் அதிகரிப்பு…

தமிழகம்.. குழந்தைகளிடையே வேகமாக பரவும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்! அறிகுறி என்ன? இதோ வழிகாட்டு நெறிமுறை | Tamil health department guidelines: Immediate medical treatment ...

கோவை மாவட்டத்தில் ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து இந்திய குழந்தை மருத்துவ குழுமத்தின்(ஐஏபி) தமிழ்நாடு கிளை தலைவர் மருத்துவர் கே.ராஜேந்திரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைக்கு வருவோர் மற்றும் அதன் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சங்கம் சார்பில் மக்களிடம் குளிர்காய்ச்சல்(இன்ப்ளூயன்சா வைரஸ்) தாக்கத்தைகுறைக்கவும்,தடுப்பூசியின்முக்கியத்துவத்தைவலியுறுத்தவும்மாநிலஅளவில்விழிப்புணர்வுஇயக்கம்தொடங்கப்பட்டுள்ளது.‘இன்ப்ளூயன்சா வைரஸ்’-ல் ஏ,பி,சி என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ வைரஸ் பருவகால தொற்றுக்களுக்கு முக்கியகாரணமாகவிளங்குகின்றன.தும்மும் போது காற்றில் பரவும் துகள்களால் மிக வேகமாக பரவும்.மேலும் நிமோனியா போன்ற மூச்சுக்குழாய் நோய்கள், சிறுவர்கள் மத்தியில் செவித்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது.ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற நோயாளிகள்அதிகரிக்கும் சீசனல் நோய்கள்: அரசு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று `சிறப்பு முகாம்' வைரஸ்பாதிப்புஏற்படஅதிகவாய்ப்புஉள்ளது.கைகளைசோப்புமற்றும்தண்ணீர்மூலம்கழுவுதல்.முககவசம்அணிவது.நோய்த்தொற்றுடன்இருப்பவர்களுடன்நெருங்கியதொடர்பைதவிர்ப்பது,தடுப்பூசிசெலுத்திகொள்ளுதல்போன்றவை நோய்பாதிப்பில்இருந்துபாதுகாத்துகொள்ளஉதவும்.ஆரோக்கியமானஉணவுகளைஉட்கொள்ள வேண்டும். போதுமான தண்ணீர்அருந்தவேண்டும்.முறையானதூக்கம்மற்றும்உடற்பயிற்சிபழக்கவழக்கங்களைகொண்டிருக்கவேண்டும்.தமிழ்  நாட்டின் பொதுத் தடுப்பூசி திட்டம், பல நோய்களை கட்டுப்படுத்த சாதனை படைத்துள்ளது. ஆனால், இன்ப்ளூயன்சா தடுப்பூசி, அரசின் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்திகொள்வதுசிரமமாகஉள்ளது.எங்கள் சங்கம்சார்பில்பொதுமக்களிடம்விழிப்புணர்வுஏற்படுத்தவும்,அரசு,தனியார்அமைப்புகளுடன்  இணைந்துகிராமப்புறங்களில்இலவசதடுப்பூசிமுகாம்களைநடத்தவும்திட்டமிட்டுள்ளோம்.காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து கடைகளில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது. மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விழிப்புடன் செயல்பட்டால் நோயின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close