இன்டர்நேஷனல் கோஜு ரியோ கராத்தே தோ இந்தியா செமினார் -2024 போட்டி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ள மாருதி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்டர்நேஷனல் கோஜூ ரியோ கராத்தே இந்தியா செமினார் போட்டி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கராத்தே பா. வில்சன் செவன்த் டான் பிலாக் பெல்ட் அவர்கள் தலைமை தாங்கினார்.போட்டியில் 5வயது முதல்30 வயது வரை ஆண்கள் பெண்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியா இன்டர்நேஷனல் கோஜி நியூ கராத்தே-தோ அம்பாசிடர் ஆன்ஷிட் K.w. வட்டனாபி 9th டான் பிளாக் பெல்ட் அவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படித்தனர். இதனை சிறப்பிக்க சிறப்பு விருந்தினர்களாக ஏ.வி. இராமமூர்த்தி, துளசிராமன், சார்லஸ் மாருதி ரெஸ்டாரன்ட் நிறுவனர் பிரபாகரன், கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாஸ்டர் W.சிபி P.P. அஸ்வந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர்கள் ஈரோடு சதாசிவம் , ஊத்துக்கோட்டை அம்பேத்ராஜ் பிச்சாட்டூர் சதீஷ், சத்தியவேடு புவனேஸ்வர் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பிளாக், பிரவுன், ப்ளூ,கிரீன்பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் கராத்தே பா.வில்சன் அனைவருக்கும் நன்றி கூறினர் ஊத்துக்கோட்டை அருகே இன்டர்நேஷனல் கோஜு ரியோ கராத்தே தோ இந்தியா செமினார் -2024 போட்டிசிறப்பாக நடைபெற்றது.