இந்து அறநிலையத் துறைக்குசோதனையான காலமே..?


தமிழக அரசிற்கு இது ஒரு சோதனையான காலமே!
நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற ஒரு வழக்கு இந்துக் கோவில்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது….அந்த வழக்கில் இந்து அறநிலையத் துறை சட்டங்கள் செல்லாது என்று அத்துறையின் அடி மடியிலேயே கையை வைத்து விட்டார்கள் எனவே, தற்போது….. அறநிலையத்துறை சட்டம் செல்லுமா செல்லாதா என்ற அடிப்படைக் கேள்வியே எழுந்துள்ளது இந்த வழக்கைப் பதிவு செய்தவர்கள் அறநிலையத் துறை மற்றும் கோவில்கள் சம்பந்தமாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆணைகள், மற்றும் வழிகாட்டுதல்களைஆதாரமாகக்கொண்டுவழக்குதொடுத்துள்ளனர்.இதற்காகநேற்றுநீதிமன்றத்தில்வாதாடியவர்கள் தங்கள் தரப்பு சான்றுகளை எடுத்துக் கூறி இந்து அறநிலையத்துறை சட்டம், அடிப்படையில் செல்லாது என்ற வாதத்தை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் இதற்குத் தீர்வு கேட்டுள்ளனர் இதனடிப்படையில் நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு தமிழக அரசிற்கு 4 வாரங்களுக்குள் இக்கேள்விக்கான தகுந்த பதிலையும் அதற்குண்டான விளக்கத்தையும் கேட்டுள்ளனர்.இது அடிப்படையையே கேள்வி கேட்கும் ஒரு வழக்கு ஆகும்….உயர்நீதிமன்றம் அரசுக்கு பதிலளிக்க 4 வார அவகாசம் கொடுத்திருப்பதால், அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இவ்வழக்கு திரும்ப விசாரணைக்குவரும்என்றுநீதிமன்றம்ஆணையிட்டுஇருக்கிறது.இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதன் அடிப்படையை புரிந்து கொண்டு அறநிலையத்துறையை கேள்விக்குறி ஆகி இருக்கும் இந்த வழக்கினை கூர்ந்து நோக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.இந்த செய்தி இதுவரை தமிழகத்தில் எந்த TVசேனலிலும் அல்லது ஊடகத்திலும் வெளிவரவில்லை!!! இது வேண்டுமென்றே முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கப்பட்டதா என்றும்தெரியவில்லை! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ளகோவில்களில்பணிபுரியும் அதிகாரிகள்முதல்அலுவலர்கள்வரைஅனைவரும்இந்துக்களாகமட்டுமேஇருக்கவேண்டும்.சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர் உட்பட அனைத்து அலுவலர்களையும் இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிவழக்கறிஞர் எஸ். ஸ்ரீதரன் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இவ்வழக்கில் ஆணையர்., உதவி ஆணையர்கள் வரையுள்ள அதிகாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு வாதிட்டது.அரசாங்கத்தின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.தமிழகம் முழுவதும் 44,121 கோயில்கள இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.1961 ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் 2-ல் கூறியுள்ளஇந்து மதத்தை பின்பற்றுவதை சத்தியபிரமாணத்தின் பேரில் உறுதி கூறும்நிரூபண படிவத்தில் விதி 3ன் படி கோயில்களில் பணிபுரிவர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பதை சத்தியபிரமாணம் செய்துசாட்சிகள் முன்னிலையில் உறுதி செய்யவும்HR & CE சட்டத்தின் பிரிவு 10 ஐ மேற்கோள் காட்டியும்,மெட்ராஸ்உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்.,மாண்புமிகு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்மார்ச் 3 ம் தேதி 2020தீர்ப்பளித்திருந்தனர்.அதன்படி, இதுவரை சத்தியபிரமாணம் செய்யாத ஆணையர், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட துறையில் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும்தாங்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், தாங்கள் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றுவதாகவும்சத்தியப் பிரமாணம் செய்து உறுதிமொழி படிவத்தில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும்,தவறும் பட்சத்தில் அவர்கள் பதவி இழப்பர்.உத்தரவு கிடைக்கப்பெற்ற எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க,இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து ஊழியர்களும்அவர்கள் பிறப்பால் இந்துக்கள் என்றும், அவர்கள் இப்போதும் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள் என்றும்சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்.இதில் இந்து மதத்தை பின்பற்றாதமாற்று மத அலுவலர்கள் சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை இந்து சொந்தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.