fbpx
Others

இந்தியா-மாலத்தீவு 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து..

இந்தியா-மாலத்தீவு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் நிதியுதவியுடன் மாலத்தீவில் பல திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தாகியுள்ளன. சுமார் ரூ.200கோடி மானியத்துடன் மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. மாலத்தீவில் படகு சேவையை மேம்படுத்துதல், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக அந்நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாலத்தீவு அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா கலீல், இந்தியா சார்பில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் முகமது அமீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close