இந்தியாவில் தயாராகும் AK-203 நிமிடத்திற்கு 700 குண்டுகளைச் சுட முடியும்….!
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களில் பல புதுமைகள் வந்து கொண்டுஇருக்கும்சூழலில்,இந்தியராணுவத்திலும் அதற்கேற்பப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அதிநவீன ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அமேதியில் தயாரிக்கப்படும் இந்த ரகத் துப்பாக்கிகளில் நிமிடத்திற்கு 700 குண்டுகளைச் சுட முடியும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.இந்திய ராணுவத்திற்கு அதிநவீன ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் விரைவில் கிடைக்க உள்ளன. இந்தத் துப்பாக்கிகள்,ரஷ்யாவின்புகழ்பெற்றகலஷ்னிகோவ்துப்பாக்கிவரிசையில்நவீனப்படுத்தப்பட்ட மாடல் ஆகும். உலகப் புகழ்பெற்ற ஏகே 47 ரகத் துப்பாக்கிகள் இந்த கலஷ்னிகோவ் துப்பாக்கி
மாடல்கள் தான். அதன் ஒரு மேம்பட்ட மாடலாகவே இந்த ஏ.கே.-203ரகத்துப்பாக்கிகள் இருக்கும்.இந்த ஏ.கே.-203 ரகத் துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 700 குண்டுகள் வரை சுடக்கூடிய திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும், இது 800 மீட்டர் தூரம் வரை துல்லியமாக இலக்கைத் தாக்கும். வழக்கமா நாம் இந்த வகைத் துப்பாக்கிகளை ராணுவம் உட்படப் பாதுகாப்புப் படைகளுக்குக் கொடுக்க இறக்குமதி தான் செய்வோம். ஆனால், இந்த முறை உள்ளூரிலேயே இந்த வகைத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு முயற்சியில் இந்தத் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘ஷெர்’ என்று அழைக்கப்படும் ஏ.கே.-203 துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா ராணுவம் சுமார் ரூ.5,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், இந்த நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான துப்பாக்கிகளை வழங்கும். 2030 டிசம்பருக்குள் அனைத்துத் துப்பாக்கிகளையும் டெலிவரி செய்யத்திட்டமிட்டுள்ளதாகஇதன்தலைவர்மேஜர்ஜெனரல்எஸ்.கே.சர்மாதெரிவித்துள்ளார். இதுவரைசுமார்48,000துப்பாக்கிகள்டெலிவரிசெய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மேலும் 7,000
துப்பாக்கிகளும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் கூடுதலாக 15,000 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஏ.கே.-203 ‘ஷெர்’துப்பாக்கிகள்ஏ.கே.-47மற்றும்ஏ.கே.-56துப்பாக்கிகளை விட நவீனமானது. மேலும், இது கலஷ்னிகோவ் துப்பாக்கி வரிசையில் மிகவும் ஆபத்தான துப்பாக்கியாகக் கருதப்படுகிறது. இந்தத் துப்பாக்கி இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில்உள்ளINSASரகத்துப்பாக்கிகளுக்குமாற்றாகஇருக்கும்.ஏ.கே.-203துப்பாக்கியில்7.62×39மிமீசைஸில்இருக்கும்தோட்டாக்கள்பயன்படுத்தப்படுகின்றன. இது தற்போது INSASதுப்பாக்கிகளில்பயன்படுத்தப்படும்5.56×45மிமீதோட்டாக்களைவிடப்பெரியதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.ஏ.கே.-203 துப்பாக்கியின் எடை 3.8 கிலோ ஆகும். அதே சமயம் INSAS துப்பாக்கியின் எடை 4.15 கிலோவாகும். அதேபோல INSAS துப்பாக்கிகளின் நீளம் 960 மிமீ ஆக உள்ளநிலையில்,புதியஏ.கே.-203துப்பாக்கியின்நீளம்705மிமீஆகும்.இந்தியராணுவத்தின்திறனைஅதிகரிக்கும்வகையில்இந்ததுப்பாக்கிவடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவில் களமிறக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு தரத் திட்டமிடப்பட்டுள்ளது.