ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் விலையில்லா கொசுக்கள்….?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் கொசுக்கள் உற்பத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது இப் பூங்காவிற்கு காலையிலும் மாலையிலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் முதியவர்கள் நடைப்பயிற்சி உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் தற்போது அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி பூங்கா முழுவதும் கொசுக்களால் நிரம்பியுள்ளன இதனால் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கொசுக்கடியால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் காய்ச்சல், மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது மேலும் இப்பூங்காவில் ஆண்கள் கழிவறைகள் வருடகணக்கா சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது நகராட்சி நிர்வாகம் பூங்காவில் கொசு மருந்து அடிக்கவும் ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.