fbpx
Others

ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

ராணிப்பேட்டை மாவட்டம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் பூ வியாபாரிகள் கடை நடத்தி வந்த அதே இடத்திலேயே கடைகளை ஒதுக்கி தர வேண்டி ஆற்காடு புஷ்பு வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் ஆற்காடு புஷ்பு வியாபாரிகள் நல சங்கம் உறுப்பினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பூக்கடை வைத்து நடத்தி வந்தோம். கடந்த மார்ச் 2023 ல் ஆற்காடு நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதால் எங்களின் கடை சாவியை பெற்றுக் கண்டு ஒரு ஆண்டு காலத்தில் கடைகளை கட்டி உங்களுக்கே ஒப்படைக்கின்றோம் என்று வாக்குறுதி அளித்து நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர் அவர்கள் கூறியதின் பேரில் நாங்கள் கடைகளை காலி செய்து கொடுத்தோம். இந்நிலையில் வேலூர் மெயின் ரோட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு முன்பாக போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கடைகளை நடத்தி வந்தோம். அதன்பின் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆற்காடு நகராட்சி ஆணையர் அவர்கள் நாங்கள் கடை வைத்து நடத்தி வரும் இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அப்புறப்படுத்த கூறினார்கள் எனவே கடையை காலி செய்யுங்கள், எனக் கூறி எங்களின் கடைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன்படி நாங்கள் அனைவரும் நகர மன்ற தலைவர் அவர்களிடம் முறையிட்டதன் பேரில், புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய ஆய்வுக்குழுவினர்கள் வருகிறார்கள், அதனால் ஐந்து நாட்கள் கழித்து அதே இடத்தில் கடையை வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்கள். ஆனால் அந்த ஐந்து நாட்கள் கழித்தும் எங்களை கடை வைக்க விடாமல் நகராட்சி அதிகாரிகள் பூக்கள் மற்றும் பூத்தட்டுக்களை எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் அனைத்து பூ வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பூ வியாபாரிகள் சங்கத்திற்கு நாங்கள் ஏற்கனவே கடை நடத்தி வந்த இடத்திலேயே கடைகளை ஒதுக்கி தந்து எங்கள் வாழ்வாதாரத்தை காத்திடுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த மனுவில் கோரிக்கையாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close