fbpx
Others

ஆற்காடு நகராட்சி–பிளாஸ்டிக் பயன்படுத்த தடைஇருக்காஅல்லது இல்லையா…?

ஆற்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதா? அல்லது அனுமதிக்கப்பட்டுள்ளதா?வெட்ட வெளியில் பிளாஸ்டிக் பயன்பாடுசமூக ஆர்வலர்கள் கேள்வி..?

ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு பேருந்து நிலையம் வேலூர் பஸ் நிறுத்தம் அருகில் இரண்டு முட்டை கடைகள் செயல்பட்டு வருகிறது இக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி முட்டைகளைக் கட்டி திறந்த வெளியில்வைத்துவிற்பனைசெய்துவருகின்றனர்மேலும்ஆற்காடுமுழுவதும்அனைத்துகடைகளிலும்உணவகங்களிலும்பிளாஸ்டிக் கவர்கள் அதிகப் பயன்பாட்டில் உள்ளன பிளாஸ்டிக் பொருட்களால்ஏற்படும்தீமைகள்பலஉள்ளனசுற்றுச்சூழல்மாசுபாடுஏற்படுகின்றனபிளாஸ்டிக் ஒரு மட்காத பொருள். அது மண்ணில் கலப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இதனால் நிலம் மற்றும் நீர் மாசுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் நீரின் தரத்தைகடுமையாகபாதிக்கின்றன.ஆடுமாடுகள்பிளாஸ்டிக்கவர்களைஉணவுஎன்றுநினைத்துஉட்கொள்வதால்  அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டுஅவற்றின் குடல்களில் அடைப்பு ஏற்பட்டு பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றன உயிரிழக்கின்றனபிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது டையாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகின்றன இதனை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும், பிளாஸ்டிக் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலந்து மனித உடலுக்குள் சென்று ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.இப்படி இருக்க ஆற்காடு நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?அல்லதுஅனுமதிகொடுக்கப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது பெயருக்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட நகராட்சி என்று விளம்பரம் செய்துவிட்டு கடைகளிலும் உணவகங்களிலும் மற்ற பிற பயன்பாட்டில் பிளாஸ்டிக்பொருட்கள்பயன்படுத்தப்படுகின்றன இதனை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?கடைக்காரர்களிடம் கமிஷன் பெறுவதால் ?ஏனென்றால் அனுமதி கொடுக்கப்பட்டது போலவெட்ட வெளியில் அனைத்து கடைகளிலும் கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் கவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றனபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்கு ஆற்காடு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது நடவடிக்கை எடுக்குமா? நடகராட்சி நிர்வாகம் அல்லது கண் துடைப்பு வேலை செய்யுமா?

Related Articles

Back to top button
Close
Close