ஆர்.பி.உதயகுமார்` -அண்ணாமலையால் டெல்லி தலைமைக்கே ஆபத்து ஏற்படும்!’

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார். அவர் ஆற்றிய பணிகள், தியாகம் என்ன… ஏற்கெனவே அரவக்குறிச்சியில் தோற்றுப் போனார், அதனைத் தொடர்ந்து கோவையில் பல கோடிகளை வாரி இறைத்தும் மக்கள் நிராகரித்து விட்டனர். ஆனால், இன்றைக்கு பாஜக வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்கிறார்.நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருடன் நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். ஆனால், தமிழகத்தில் ஒரு இடம்கூட பிடிக்க முடியவில்லைஅதற்குகாரணம்,அண்ணாமலைபோன்றஅவசரக்குடுக்கைகள் தான்.கடந்த 2019-ல் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர், தற்பொழுது 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் 3,4சுற்றுபின்தங்கிஅதன்பின்புதான்வெற்றிஉறுதிசெய்யப்பட்டது.தற்பொழுது கூட்டணி தயவால்தான் ஆட்சியை பிடித்துள்ளனர்.அண்ணாமலைபோன்றஅனுபவம் இல்லாதவர்கள்அரைவேக்காட்டுத்தனமாகஅவதூறுபிரசாரம்செய்துபின்னடைவுஏற்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து 19.39 சதவிகித வாக்குகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் 20.46 சகவிகித வாக்குகள் பெற்று ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளோம்.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை முன்னிலை படுத்திதான் வாக்குகள் கிடைத்தது, அண்ணாமலைக்காக ஒரு வாக்கு கூட யாரும் போடவில்லை. பாமக, பாரிவேந்தர், டிடிவி, சரத்குமார், ஓபிஎஸ், ஜான்பாண்டியன் ஆகியோருடன் கூட்டணி வைத்தும் வாக்கு குறைந்துள்ளது.எடப்பாடி பழனிசாமியை கண்ணாடி பார்க்கச் சொல்கிறார் அண்ணாமலை… முதலில் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும். பாஜக-வில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள், மூத்தவர்கள், அனுபவசாலிகளை திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார்.

தமிழக நலனுக்காக எதையும் வலியுறுத்தியதில்லை அண்ணாமலை, அறிவுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்புகிறார். காய்ந்த மரத்தில்தான் கல்லடி படுவதுபோல் எடப்பாடி பழனிசாமி மீது பழிகளை சுமத்துகிறார்.அண்ணாமலை சுற்றி சுற்றி சூழ்ச்சியை ஏற்படுத்துகிறார். அவர் விரிக்கும் சூழ்ச்சி வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள். அதிமுக-வை தமிழக மக்கள் கைவிட மாட்டார்கள், எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி வருவதை சிலர் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் என்பதால் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதை வாபஸ் வாங்க வேண்டும், இல்லையென்றால் அண்ணாமலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவோம்.அதிமுக பற்றி கவலைப்படும் நீங்கள், அதிமுக உறுப்பினரா? அதிமுக-வை தொண்டர்களும் மக்களும் பார்த்துக் கொள்வார்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல உள்ளது, ஒருபோதும் உங்கள் சூழ்ச்சி எடுபடாது.நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டும் முடிவு எடுக்கவில்லை. கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்களை அழைத்து கருத்துக் கேட்ட பின்புதான் முடிவெடுத்தார்.ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றி அரசியல் நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இதே போன்று டெல்லி தலைமை அண்ணாமலையிடம் பேசியதை தனக்கு ஆபத்து வரும்போது கூட வெளியிடுவார். இதனால், டெல்லி தலைமைக்கு கூட அண்ணாமலையால் ஆபத்து இருக்கிறது. தொடர்ந்து எலும்பில்லாத நாக்குடன் அண்ணாமலைபேசினால்தொண்டர்களேவெகுண்டுஎழுவார்கள்.அரவேக்காட்டுத்தனமாக வார்த்தைகளை சிதற விடுவதால் அதிமுக-வுக்கு எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை” என்றார்.