ஆரோநிலங்கள்தனியாருக்குவிற்பனை–கவர்னர்ஆர்.என் ரவி, ஜெயந்தி ஐஏஎஸ் மீது புகார்…?
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் புதுச்சேரியின் எல்லையில் உள்ள தமிழக பகுதியாகும். ஆனால் இது முற்றிலும் நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். மத்திய அரசு நிர்வாகம் என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள இடம் என்பதால் அங்குள்ள நிலம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களைத் தமிழ்நாடு அரசே கவனித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது மட்டுமின்றி, வசித்தும் வருகின்றனர்.ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக கவர்னர் ஆர்.என் ரவியும், செயலாளர் பதவியில் குஜராத் கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆரோவில் பகுதிக்குச் சொந்தமான நிலங்களைப் பரிவர்த்தனை என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி, பவுண்டேஷன் பொறுப்பில் இருப்பவர்கள் பலனடைந்து வருவதாக புகார்களை கூறி உள்ளார்கள் அந்த உள்ளூர் மக்கள் சிலர். ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அருண் அம்பதி, பிரபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் நேற்று பொதுமக்களுடன் வந்து விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார்அளிததுள்ளனர்.பிறகு ஓய்வுபெற்ற ராணுவஅதிகாரி அருண் அம்பதி இந்த புகார் பற்றி கூறுகையில், “ஆரோவில் பவுண்டேஷனுக்கு சொந்தமாக 3,300 ஏக்கர் நிலங்கள் இருக்கிறது. ஒரு சில நிலங்களை தேவையில்லைஎன்றுஇவர்களேமுடிவெடுத்துதனியாருக்குவிற்பனைக்குகொடுத்துவிட்டார் கள்., அதற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று வாங்கிக்கொள்கின்றனர். இந்த நிலம் பரிவர்த்தனையில் இன்று நாங்கள் புகார் கொடுத்தது 16 ஏக்கர். பல கோடி விலைமதிப்புள்ள இந்த நிலத்தை தனிநபரிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக விலைமதிப்பு குறைவாக பின்புறம், ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை வாங்கி ஊழல் செய்திருக்கிறார்கள்.இந்த ஊழல் குறித்து விழுப்புரம் எஸ்பியிடம் புகார் அளித்திருக்கிறோம். உரிய நடவடிக்கை குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.ஆரோவில் பகுதிக்கான நிலம், சட்டம் ஒழுங்கு தமிழ்நாடு அரசிடம்தான் உள்ளது. இவர்கள் செய்கிற ஊழலை கேள்வி கேட்டாலோ, புகாராக கொண்டு சென்றாலோ வீட்டில் இணையதளம்துண்டிப்புபோன்றநடவடிக்கைக்குஆளாக்கப்படுகிறோம். பல மனஉளைச்சல் சம்பவங்கள நடந்துள்ளது. ஒவ்வொரு விஷயமாக நாங்கள் வெளியே கொண்டு வருவோம். செம்மரம், மணல் கடத்தல் போன்ற பல புகார்கள் டிரஸ்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.மற்றொரு புகார்தாரரான பாலமுருகன் கூறுகையில், ” சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் நிலத்தை விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை. ஆரோவில் டிரஸ்டில் சொந்த பணத்தை கொடுத்து வாங்கிய நிலத்தை 2021ல் பதவியேற்ற இவர்கள் ஆரோவில் வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால் டிரஸ்ட் வாங்கிய நிலத்தை அடிமட்ட விலைக்கு
விற்றுகொண்டிருக்கின்றனர். ஆரோவில்லுக்கு மட்டும் நஷ்டம் கிடையாது. அரசுக்கு பலகோடி வருவாய்இழப்புஏற்பட்டிருக்கிறது.ஆரோவில்லுக்கு ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. நிலம் வாங்குபவர்கள் முழு பணத்தையும் கொடுக்கிறார்கள். ஆனால் அந்த பணம் எங்குசெல்கிறதுஎன்றுதெரியவில்லை.இதுகுறித்துபுகார்அளித்திருக்கிறோம். ஒரு சதுர அடியை 16 ரூபாய்க்கு வாங்கி ரூ.6 ஆயிரத்திற்கு பிளாட் போட்டு விற்பனை செய்கிறார்கள். இந்த விலைக்கு விற்கும் என்று ஆரோவில் பவுண்டேஷன் அதிகாரிகளுக்கும் தெரியும். 2023லிருந்து இது நடந்து வருகிறது” என்றார்.விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் இந்த புகார் குறித்து சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் கூறுகையில், “ஆரோவில் பவுண்டேஷன் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. 5 ஆண்டுகளில் பல ஊழல்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கிறது. அதில் இருக்கிற ஒரு ஊழலை விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக ஆர்.என் ரவி, ஜெயந்தி இருவரும் ஆர்.எஸ்.எஸ் சொல்லி செய்கிறார்களா, பாஜக சொல்லி செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஆணவங்களில் ஊழல் செய்திருக்கிறார்கள்.ஆர்.என்.ரவி, குஜராத் மாநில கேடரை சேர்ந்த ஜெயந்தி ஐஏஎஸ் மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். இவர்கள் மீது வழக்கு எடுக்கவேண்டும். எஸ்பியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். நியாயம் கிடைக்கும்வரை இந்த போராட்டத்தை கையில் எடுப்போம். தமிழக அரசுக்கும் இதில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.விழுப்புரம் எஸ்பி விசாரணை நடத்தி 6 நாளில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு கூறினார்.ஆரோவில் இருந்து 16 ஏக்கர் நிலம் விற்பனையில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு 10 ஏக்கரும், மற்றொருவருக்கு 3.5 ஏக்கரும், இன்னொருவருக்கு 2.5 ஏக்கரும் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகளை புகார்தார்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலாக அவர்கள் குறைந்த மதிப்புள்ள நிலத்தை கொடுத்துள்ளதாகவும் புகார்தார்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.