ஆதவ் அர்ஜுனா NSGகமாண்டோபாதுகாப்புடன்டெல்லி பயணம்…?
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், த.வெ.க. தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று தனியார் விமானத்தில் 5 பேருடன் டெல்லி சென்ற நிலையில்,NSGகமாண்டோபாதுகாப்புடன்சென்றதாகவெளியாகியுள்ளதகவல்
வட்டாரங்களில்பெரும்விவாதத்தைஏற்படுத்தியுள்ளது.கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாட்டையே உலுக்கியது. கடந்த மாதம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடந்த இந்த மக்கள் சந்திப்பில்விஜய்யைப்பார்க்கஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.விஜய் தாமதமாக வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவ்ர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதற்கிடையே விஜய் வீடியோ வெளியிட்ட நிலையில், அதில் அவர் பேசியதுகுறித்தும்கடும்விமர்சனங்கள்எழுந்துள்ளன.இதற்கிடையேதிடீரெனஆதவ்அர்ஜுனாதனிவிமானத்தில்டெல்லிசென்றுள்ளார்.அவர்இந்தியகூடைப்பந்துசம்மேளனத்தின் நிர்வாகியாக இருக்கும் நிலையில், தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாகவே அவர் டெல்லி சென்றுள்ளதாக அவரது தரப்பில் விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், கரூர் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்வதற்காகவும் டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக, ஆதவ் அர்ஜுனா இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் பா.ஜ.க.எம்.பி.ஹேமமாலினியும் கலந்து கொள்ள உள்ளார். கரூர் சம்பவத்தை ஆராய பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி
தலைமையில்8பேர்கொண்டஉண்மைஅறியும்குழுஅமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேற்று ஆய்வைத் தொடங்கிய நிலையில், “இந்த சம்பவம் சாதாரணமாக தோன்றவில்லை, இதில் உள்நோக்கம் இருக்கலாம்”எனஹேமமாலினிகூறியிருந்தநிலையில்,இன்றுஅவர்தனதுஆய்வுஅறிக்கையைஅமித்ஷாவிடம்சமர்ப்பிக்கவுள்ளார்.திமுககாவல்துறையினரையும்உள்ளூர்ரவுடிகளையும்பயன்படுத்திதிட்டமிட்டுகுழப்பத்தைஏற்படுத்தியதாகத.வெ.க.குற்றம்சாட்டியுள்ளது.மேலும்,கூட்டம்தொடங்குவதற்குமுன்பேமின்சாரம்துண்டிக்கப்பட்டதாகவும், உண்மையை மறைக்க நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சமூக விரோதிகள் கூட்டத்தில் ஊடுருவி விஜயை நோக்கி செருப்புகளும் கற்களும் எறிந்ததாகவும் த.வெ.க.குற்றம்சாட்டியுள்ளது.இந்தவழக்குவிரைவில்விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று அமித் ஷாவுடனான ஆதவ் அர்ஜுனாவின் சந்திப்புமுக்கியத்துவம் பெறுகிறது.இந்த சந்திப்பில் கரூர் சம்பவத்தின் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பாதைகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் த.வெ.க. மற்றும் பா.ஜ.க. இடையே புதிய அரசியல் சமிக்ஞைகள் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதே நேரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணத்தில் உடன் சென்றவர்களின் விபரம் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.அதாவது விஎஸ்ஆர் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான வீடி- சிஎம்ஆர் என்ற தனி விமானத்தில்தான்நேற்றுஆதவ்அர்ஜுனாடெல்லிசென்றிருக்கிறார். அந்த விமானத்தில் மூன்றுபணியாளர்கள்இருந்திருக்கிறார்கள்.மேலும்,ஆதவ்அர்ஜுனாவுடன், உதயகுமார், மகேந்திரன், அருள் வெங்கடேசன் ஆகியோர் பயணித்துள்ளனர். இதில் நான்காவது மற்றும் ஐந்தாவது பயணிகளாக ரஷ்பால் சிங், கமல் ஜோஷி ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு. அவர்களது பெயருக்கு அருகே nsg என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நேஷனல் செக்யூரிட்டி கார்டு எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.அரசியல் தலைவராக மட்டுமே ஆதார்ஜுனா இருக்கும் நிலையில் அவருக்கு மத்திய அரசு சார்பில் எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுடன் என்எஸ்ஜி வீரர்கள் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் 2006 தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மகேந்திரனும் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.