Others
ஆசனூர் சாலையில் விழுந்த மூங்கில் மரத்தால் வாகன ஓட்டிகள் அவதி..

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் வரை சாலையோரத்தில் ஏராளமான காய்ந்த நிலையில் |மூங்கில் மரங்கள் உள்ளது.இந்த மரங்கள் அவ்வப்போது சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலை ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் உள்ள மூங்கில் மரம் சாலையில் முறிந்து விழுந்தது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். சாலையில் விழுந்த முங்கில் மரத்தை அகற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.