fbpx
RETamil News

70 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அதிசய வால் நட்சத்திரம் வெறும் கண்ணால் பார்க்கலாம்

கிறிஸ்துமஸ் மாதத்தில் தோன்றும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று கூறுவார்கள். அப்படி தோன்றும் இந்த வால் நட்சத்திரம் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது காட்சியளிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வாறு இந்த மாதத்தில் தோன்றும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திம் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது தோன்றும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்றும், மேலும் இந்த கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரத்தை 46 பி விர்டனேன் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வால் நட்சத்திரத்தை நேரடியாக கண்களால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16-ஆம் தேதி இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் , அதனால் அன்று இரவு 10 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் அந்த வால் நட்சத்திரத்தை பார்க்கலாம் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close