அவசர வக்ஃபு திருத்தச் சட்டதிற்க்கு ஆற்காட்டில் விசிககண்டனம்….
அம்பானி, அதானி குடும்பத்திற்காகவே அவசர வக்ஃபு திருத்தச் சட்டம்
ஆற்காட்டில் நடைபெற்ற விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அப்துல் நாசர் கண்டனம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களின் சொத்துகளை கைபற்றும் வகையில் சதி ஆலோசனை செய்து வஃப்திருத்தச் சட்டம் கொண்டு
வந்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.பிரபு (எ) பிரபாகரன் தலைமை தாங்கினார் ஆற்காடு நகர செயலாளர் து.ராஜன், தொ.மு அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட பொருளாளர் சம்பத்,திமிரி மேற்கு ஒ.செ. பொன். சுதானந்தன், கணியம்பாடி ஒ.செ.ரவி, திமிரி கிழக்கு ஒ. மசெமு.கன்னியப்பன், திமிரி பேரூர் கழகம் செயலாளர் டிபி.ஏழுமலை ஆற்காடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுகுமார், கலவைப் பேரூராட்சி செயலாளர்மு.பிரகாஷ், விளாபாக்கம் பேரூராட்சி செயலாளர் வி.விஜய், மகளிரணி மாவட்ட செயலாளர் தமிழ் மங்கை, சங்கீதா, மாலதி,துர்கா,வாசுமதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்ஆற்காடு தொகுதி செயலாளர் சிறுத்தை சின்னையன் அனைவரையும் வரவேற்று பேசினார் அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்சி.பஞ்சாட்சரம், மதிமுக மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார், ம.ம.க மாவட்ட செயலாளர் இம்ரான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஜ்மல், எஸ்.டி.பி ஐ கட்சியின் மாவட்ட பொசெயலாளர் சையத் கரீம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர், கே ஓ.நிஷாத் அஹமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுததைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ. வ.அப்துல் நாசர் கண்டன உரையாற்றினார் அவர் பேசும்போது முஸ்லிம்கள் தங்களின் பக்திக்காக தொண்டிற்காக தங்களின் சொத்துக்களை நன்கொடையாக வழங்குகின்றனர், மற்றொன்று அல்லாஹ்வின் பேரில் வழங்குகின்றனர் இப்படி வழங்கப்பட்ட சொத்துக்கள் வக்ஃபு சொத்துக்களாக மாறுகிறது இந்த சொத்துக்களை விற்கவோ, வேறு யாருக்கும் தானமாக வழங்குவோ முடியாது இந்த நிலையில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரமாக வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது ஏனென்றால்அம்பானி அதானி குடும்பம் வக்ஃபு வாரிய சொத்தை அபகரித்து அனுபவித்து வருகின்றனர் இந்த சொத்தினை மீட்க வக்ஃபு வாரிய அமைப்பின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நடைபெற்று வரும் நிலையில் முடிவுக்கு வந்துள்ளதுஇந்த காரணத்திற்காகவே அம்பானி அதானி குடும்பத்தின் நலனுக்காகவேமத்திய பாஜக அரசு வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர,கிளைச் பொறுப்பாளர்கள், பிற அணி பொறுப்பாளர்கள் விசிக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இலக்கிய பேரவை கானா கவி நன்றி கூறினார்.