Others
அரசுப் பேருந்து திண்டிவனம் அருகே கவிழ்ந்து விபத்து…

கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த 60 பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். விபத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.