அரசுக்கு எதிராகசெயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கைபாயுமா..?
திருவள்ளூர் மாவட்டம் சிறப்புசெய்தி
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட வேட்டி சேலைகள் மழையில் நனைந்து சேதம்.அரசின் சீரிய திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா சமூக ஆர்வலர்கள் கேள்வி தமிழக அரசால் ஆண்டாண்டு தோறும் தைத்திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, அரிசி, மளிகை தொகுப்பு மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அரசின் இலவச வேட்டி சேலை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் குப்பை கூலங்களுடன் சேர்ந்து மழையில் நனைந்து வீணாகி கிடைக்கிறது.
ஆண்டாண்டு தோறும் வழங்கப்படும் இலவச பொருட்களையும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என புகார்கள் நிலுவையில் உள்ளது. அதே போன்று இந்த ஆண்டும் வழங்கப்பட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குறிப்பாக ஏழை எளிய விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் கிடப்பில் போடப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.