fbpx
Others

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளை மூலமாக ரூபாய் 3,811 கோடி நிதி….?

மாநில அரசியலில் ஒன்றிய அரசியல் கட்சிகள்; காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும்,  பாஜகவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதானா? - Is an Alliance with Congress and  BJP the ...கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. இதனை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்த திட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. அரசியலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு 2024 – 25 ஆம் நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2024 – 2025 ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்து கொடுக்க சில நிறுவனங்கள் தேர்தல் அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான விதிகளின்படி ஒரு நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் வசூலித்த தொகையில் 95 சதவீதத்தை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மொத்தம் உள்ள19தேர்தல்அறக்கட்டளைகளில் 13 அறக்கட்டளைகள் நன்கொடை குறித்த விவரத்தை தாக்கல் செய்துள்ளன. ஜன்ஹித், பரிபர்தன், ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய்பாரத் ஆகிய 4 அறக்கட்டளைகள், தாங்கள் எந்த பணமும் வசூல் செய்யவில்லை என்றும் நன்கொடையாக கொடுக்கவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளன.ஒன்பது அறக்கட்டளைகள் இணைந்து மொத்தம் 3,811 கோடி ரூபாயை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. இந்த நிதியில் அதிபட்சமாக பாஜவுக்கு 3,112 கோடி கிடைத்துள்ளது. இது மொத்த நிதியில் 82 சதவீதம் ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 299 கோடி ரூபாய்( 8 சதவீதம்) கிடைத்துள்ளது. மீதமுள்ள 400 கோடி ரூபாய்(10 சதவீதம்) மற்ற கட்சிகளுக்கு கிடைத்துள்ளன.புருடெண்ட் தேர்தல் அறக்கட்டளை ரூ.2,668.49 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளது. அதில் 2,180.71 கோடி ரூபாயை பாஜவுக்கும், 21.63 கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சிக்கும் கொடுத்துள்ளது. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், பாரதி ஏர்டெல் , அரவிந்தோ பார்மா, டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் போன்ற நிறுவனங்களிடமிருந்து இந்த டிரஸ்ட் நிதியைப் பெற்றது. ப்ரொகிரஸிவ் தேர்தல் அறக்கட்டளை 915 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்த நிலையில், 757.62 கோடி ரூபாயை பாஜவுக்கும், 77.34 கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சிக்க்கும் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் – 102 கோடி ரூபாய்    ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் – 98 கோடி ரூபாய் ஆந்திராவை ஆளும் தெலுங்குதேசம் – 44 கோடி ரூபாய் தெலுங்கானாவின் பாரதிய ராஷட்ரீய சமிதி கட்சி – 10 கோடி ரூபாய் பிஜூ ஜனதா தளம் – 15 கோடி ரூபாய் தமிழ்நாடில் ஆளும் திமுக – 10 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளை மூலம் நன்கொடை பெற்றுள்ளன. முந்தைய நிதியாண்டில், அதாவது 2023-24 ஆம் ஆண்டில், பாஜக ரூ.3,967.14 கோடியை தன்னார்வ பங்களிப்புகளாகப்பெற்றது.அதில்43சதவீதம்அல்லதுரூ.1,685.62கோடிதேர்தல்பத்திரங்களிலிருந்து பெற்றது. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் 2024 இல் அதைத் தடை செய்தது.தேர்தல் பத்திரங்கள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு 2024 – 25 ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளை மூலமாக ரூபாய் 3,811 கோடி நிதி வழங்கியுள்ளன. அதில் 82 சதவீதம் அதாவது, 3,112 கோடி ரூபாய் பாஜவுக்கு கிடைத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close