அமைச்சர் ரகுபதி–நடிகர் விஜய் தோல்வியை சந்திப்பார்..
யாரும் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர்ரகுபதிதெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில்செய்தியாளர்களைசந்தித்ததமிழ்நாடுசட்டத்துறைஅமைச்சர்ரகுபதி,”சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை; அப்படி யாரேனும் சொன்னால்அவர்களுக்குமக்கள்பாடம்புகட்டுவார்கள் நடிகர்விஜய்எம்ஜிஆர்பாணியைபின்பற்றப்பார்க்கிறார்;அதுஒருபோதும்நடக்காது;எல்லோரும்எம்ஜிஆர்ஆகமுடியாது.திமுகமீதுவிஜய்வைத்துள்ளகுற்றச்சாட்டுபிசுபிசுத்துப்போகும்.அரசியல்கட்சிதொடங்கியுள்ளநடிகர்விஜய்தோல்வியைத்தான்சந்திப்பார்.அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏற்கனவே ஊழல் பட்டியலை எல்லாம் அண்ணாமலை கொடுத்திருந்தார் அது புஷ்வானமாகிவிட்டது. அதைப்போல் தவெக தயாரிக்கும் ஊழல் பட்டியலால் எந்தவித பலனும் பயனும் கிடைக்கப்போவதில்லை. 2024 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் போனதை போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியால் கூட்டணி அமைக்க முடியாது,”என்று தெரிவித்தார். இதனிடையே நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது எனப்பேசியிருந்தார். சீமானை மறைமுகமாக குறிப்பிட்ட ரகுபதி, சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார்.