அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம்…?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களையடுத்து, போர் மூளும் அச்சத்தால் மத்திய கிழக்கில் கொத்து கொத்தாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு
வருகின்றன. முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களும் பாதுகாப்புகருதிதங்கள்விமானங்களைரத்துசெய்துள்ளன.அதுகுறித்தவிவரங்களைதற்போதுபார்க்கலாம்.ஈரானில் அந்நாட்டு அரசுக்குஎதிராகதீவிரபோராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் ஒன்று,அங்கு5,002பேர்உயிரிழந்துள்ளதாகஉறுதிப்படுத்தியுள்ளதாக கூறியது. மேலும், நீண்டகால இணைய முடக்கம் காரணமாக, உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டதாகவும் மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், ஈரானிய அதிகாரிகள் 3,117 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, போராட்டக்காரர்களின் திட்டமிட்ட மரண தண்டனைகளை நிறுத்தியதாக கூறப்படுவதையும் ஈரான் அரசு மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி என ஈரான் வழக்கறிஞர் ஜெனரல் கூறினார்.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய ராட்சத போர்க்கப்பல் ‘ஆர்மடா‘ ஈரானை நோக்கி செல்வதாக அமெரிக்க அதிபர் கூறியதை அடுத்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் போராட்டக்காரர்களை கையாளும் விதம் குறித்தும், அணுசக்தி திட்டம் குறித்தும் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கையும் விடுத்தார்.அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனும், அதனுடன் இணைந்து இன்னும் பல போர்க் கப்பல்களும் ஈரானை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. இவைகளுடன், பாரசீக வளைகுடா மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்களும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதோடு, கூடுதலாக அமெரிக்க விமானப்படை F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ஜெட் விமானங்களும், ராணுவ சரக்கு விமானங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தும், தற்காப்புப் பணிக்காக கத்தாருக்கு டைபூன் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.இதனால்,மத்தியகிழக்கில்தற்போதுபோர்பதற்றம்தொற்றியுள்ளது.இப்படிப் பட்ட சூழலில், பல முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள், அந்த பிராந்தியம் முழுவதும் விமானங்களை ரத்து செய்து வருகின்றன. மோசமான பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி, லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ், கேஎல்எம் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள், நேற்று இரவே இஸ்ரேல் மற்றும் முக்கிய வளைகுடா பகுதிகளுக்கு விமானங்களை ரத்து செய்ததாக விமான போக்குவரத்து செய்தி நெட்வொர் ஏர் லைவ் தெரிவித்துள்ளது.மேலும், வார இறுதி முழுவதும் நீடிக்கும் இந்த இடைநிறுத்தத்தால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்து வருகிறன்றனர். ஞாயிறு வரை இஸ்ரேல் மற்றும் வளைகுடாவிற்கான அனைத்து இரவு நேர விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக கேஎல்எம் தெரிவித்துள்ளது.இதேபோல், லுஃப்தான்சா குழுமம் இஸ்ரேலுக்கான விமானங்களை பகல்நேர நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. மேலும், ஈரானிய மற்றும் ஈராக் வான்வெளியைத் தவிர்ப்பதை நீட்டித்துள்ளது.இவர்களோடு, வட அமெரிக்க விமான நிறுவனங்களான புனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் கனடா ஆகியவை, நேற்றும், இன்றும் டெல் அவிவிற்கு திட்டமிட்ட சேவைகளை ரத்து செய்தன. மேலும், பிராந்திய பதற்றங்கள் காரணமாக, ஏர் பிரான்ஸ் மற்றம் கேஎல்எம் ஆகியவை, இஸ்ரேல், துபாய் மற்றும் சவுதி அரேபியாவிற்கான விமானங்களை ஞாயிற்றுக் கிழமை வரை ரத்து செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.கடந்த வாரம், ஈரான் தனது வான்வெளியை தற்காலிகமாக 5 மணி நேரம் மூடியது. இதனால், அமெரிக்க ராணுவ நடவடிக்கை குறித்தகவலைகள், விமான நிறுவனங்களை இத்தகைய நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தங்கள் சர்வதேச சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.