fbpx
Others

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!மு.க.ஸ்டாலின் உறுதிமொழி..

திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சென்னை வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி56வது நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்  பேரணி – அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி – today news in tamil | daily news tamil  | தமிழ் ... ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது;  தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்…

Related Articles

Back to top button
Close
Close