fbpx
Others

இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு..ஆனால்..?

தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் இந்தோனேசியா – மலேசிய பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் – நிலக்கடலை எண்ணைய்களை மானிய விலையில் வழங்கக்கோரி சென்னையில் மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு காத்திருப்பு போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து குண்டு கட்டாக 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது ? அன்புடையீர் ,!!!  இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு, ஆனால் 72% எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம், உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் கொடுமை, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய – மலேசிய பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு தமிழ்நாடு அரசு வாங்கி ரூ. 30 க்கு நியாய விலை கடைகளில் விற்பனை, அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.சுமார் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ. 1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 66 – வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறது. மேலும் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற இந்த கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.கடந்த 2019ல் ரூ. 20 க்கு விற்பனையைக் கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ. 10 க்கு மட்டுமே விற்பனையாவதால் தமிழ்நாட்டின், 22 மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.இனியும் பொறுத்திருந்தால் நாம் அகதிகளாக வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நமக்கு அளித்த வாக்குறுதியும், நமது கோரிக்கையையும், நிறைவேற்ற கோரி தொடர்ச்சியாக அமைச்சர் பெருமக்களிடமும், அதிகாரிகளிடமும் சந்தித்து வலியுறுத்திக் கொண்டே இருந்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உண்ணாவிரத போராட்டமும், கோட்டை முற்றுகையும் நடைபெற்றது.13-02-2024 அன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்நிலையில் வருகிற 19-02-2024 அன்று தமிழ்நாடு சட்டசபையில் நிதிநிலை அறிக்கையும், 20-02-2204 அன்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்ய கூடிய சூழ்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் நமது கோரிக்கையை அறிவிக்க கோரி கடந்த 16-02-2205 அன்று 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு சென்னையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்களின் தலைமையில், சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள், ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து குண்டுகட்டாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் – உணவுத்துறை செயலாளருமான கோபால் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இரண்டாவது நாளாக 17-02-2024 நேற்று 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தின் முன்பு தொடர காத்திரு போராட்டம் நடத்தும் போது காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு திருமண மண்டபத்தில்அடைக்கப்பட்டார்கள். மூன்றாவது நாளாக இன்றும் (18-02-24)சென்னை,எழும்பூர்,ராஜரத்தினம்விளையாட்டரங்கத்தின் முன்பு 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியவுடன் மீண்டும் காவல்துறை அனுமதி மறுத்து குண்டுகட்டாக கைது, எழும்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள்விவசாயிகள் சிறை செல்ல தயாராக இருந்தும் காவல்துறை தொடர்ச்சியாக விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து வருவது அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைக்குமுரணானதாகும்.  தொடர்ச்சியாக நாளையும் நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் உழவர் போராளிகள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க தலைவர்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் நாளை சென்னையில் திரளாக கலந்து கொள்ளும்படி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்புகள் பாரதிய விவசாய மக்களாட்சி அமைப்பும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் அழைப்பு விடுக்கின்றனர்….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close