ஐ.பி.எல்-2020 டைட்டில் ஸ்பான்ஸராக விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்-பி.சி.சி.ஐ!
IEOI for Title sponsorship, IPL-2020

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பிரபலங்கள் பலர் சீனா பொருட்களுக்கு அம்பாசிட்டொராக இருக்க மறுத்து வருகின்றனர்.
அதே போன்றே பி.சி.சி.ஐ, சீனா மொபைல் நிறுவனமான விவோவுடன் ஏற்பட்டிருந்த ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்கான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ள நடப்பு ஐ.பி.எல் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பாக இருக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
மேலும் புதிய டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்கான உரிமம் வரும் ஆகஸ்ட் 18,2020 முதல் டிசம்பர் 31,2020 வரை மட்டுமே செல்லும். இதனை தொடர்ந்து ஸ்பான்ஸர்ஷிப் வழங்கவுள்ள நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளையும் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் பரிட்சயமான இரண்டு இந்திய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.