fbpx
Others

நீடாமங்கலம்–வேளாண் உழவர்உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்.

வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதல் என்ற விழிப்புணர்வு முகாம் மன்னார்குடி கோட்ட வேளாண் அலுவலர் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீ ராமன்,துணைத் தலைவர் ராஜா, பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தேசிய வேளாண் நிறுவன அணி தலைவர் அமுதன் வரவேற்றார். தென்னிந்திய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விவேகானந்தம், இயற்கை விவசாயி செந்தில்குமார் ஆகியோர் விவசாய குழு அமைத்தல் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் 500 பேர் கொண்ட விவசாயிகளை ஒன்றிணைந்து 20 நபர் கொண்ட 25 குழுக்களை ஏற்படுத்தி வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து அதனை மதிப்பு கூட்டி விற்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் செயலாளர் ஜெகதீஷ் பாபு நன்றி உரையாற்றினார். இதேபோன்று ரிசியூர், ஆதனூர்,கோவில்வெண்ணி, காளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close