fbpx
GeneralOthersRETamil NewsTrending Nowஇந்தியா

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது!

cyclone circulation over Northeast Bay of Bengal-Indian Metorological department

இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல்  பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக  அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளது. கர்நாடகா, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெலுங்கானா, ஆந்திரா,உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் உள்ள இடங்களில் மட்டும் கனமழை பெய்யக் கூடும். கேரளா,மகாராஷ்டிரா,மேற்கு வங்கம், மத்திய மேற்கு அரபிக்கடல், அந்தமான் நிகோபார் கடலோர பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close