ரூ. 5400 கோடி கடன் தொகை விவகாரம்: அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு!
London court orders Anil Ambani to pay 717 Million Dollars

லண்டன் :
சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் 2012ம் ஆண்டு அனில் அம்பானி குழுமம் வாங்கிய கடன் தொகை ரூ. 7000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதன் முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவை தங்களை கட்டுப்படுத்தாது என்று அனில் அம்பானி தரப்பு கூறி உள்ளது. அதே நேரத்தில் அனில் அம்பானி வெளிநாடுகளுக்கு சென்றால் இண்டர்போல் போலீஸ் மூலமாக கைது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.















