fbpx
Others

முதல் முறையாக இந்திய ஜனாதிபதி பயணம்

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு துர்க்மெனிஸ்தான். இந்நாட்டில் புதிய அதிபராக சர்தார் பெர்டிமுக்மிடோவ் பொறுப்பேற்றுள்ளார். இவரது தந்தை குர்பெங்குலி பெர்டிமுகம்டூவொ துர்க்மெனிஸ்தானில் 2006 முதல் கடந்த 19-ம் தேதி வரை அதிபராக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்தலில் குர்பெங்குலியின் மகன் சர்தார் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள குர்பெங்குலியை ராம்நாத்கோவிந்த் சந்திக்க உள்ளார். 4 நாட்கள் துர்மெனிஸ்தானில் பயணம் மேற்கொள்ளும் குடியரசு தலைவர் வரும் 4-ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
அதன்பின்னர், துர்மெனிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு 4-ம் தேதியே ஜனாதிபதி நெதர்லாந்து செல்கிறார். அங்கு 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது நெதர்லாந்து இளவரசர் அலெக்சாண்டர் இளவரசி மெக்சிமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்க உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button
Close
Close