fbpx
Others

முதல்அமைச்சர்–மக்களோடு பழகி தேவை அறிந்து செயலாற்ற வேண்டும்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ”கள ஆய்வில் முதல்-அமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ஊரக வளர்ச்சித்துறை, கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதோடு அவர்களது வாழ்வாதாரத்திற்கும் பல்வேறு வழிகளில் உறுதுணையாகமக்களோடு பழகி தேவை அறிந்து செயலாற்ற வேண்டும்; கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல் விளங்குகின்றது. இந்த மூன்று மாவட்டங்களைப் பொறுத்தவரை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை வேகப்படுத்துங்கள். வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை கவனமாக தேர்ந்தெடுத்து பணிக்கு வருபவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்குங்கள். 15-வது நிதிக்குழு மானியப் பணிகளை விரைவாக முடித்திடவும் அறிவுறுத்த விரும்புகிறேன்! சாலை மேம்பாடு என்னுடைய காலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த திட்டத்தை முடித்துக் காட்டினேன் என்று உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் அளவுக்கு முடித்துக் காட்டுங்கள். ஒரு மனிதனின் மனதிருப்திக்கு இணையான மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய மனநிறைவைப் பெறும் அளவுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டும். மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திட்டங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா உள்ளிட்ட சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சாலை மேம்பாடு. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதற்கான திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றுதல், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்வி, அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மக்களுக்கு நல்ல பயனை தரும்

வேளாண்மைத்துறையை பொறுத்தவரை, இந்த அரசு அறிவித்த முக்கியமான திட்டம், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அதன் செயலாக்கத்தில் பலதுறைகளின் பங்களிப்பு தேவைப்படுகின்றது. இத்திட்டத்தில் பணி திருப்திகரமாக இருக்கும் வகையில் இனி செயல்பட வேண்டும். மூன்று மாவட்டங்களும் விவசாயம் சார்ந்த மாவட்டங்கள் என்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல் ஆகியவற்றில் துறை செயலர், மாவட்ட கலெக்டர்கள் என அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். விவசாயிகள் வாழ்வு மேம்பட இவை மிகவும் முக்கியமானதாகும். இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் காணப்பட்டது. நான் எந்தத் துறையையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. மாவட்ட கலெக்டர்களும், துறைத் தலைவர்களும் அறிவீர்கள். அளிக்கப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக, திட்டத்திற்காக செலவிடுவது தான் திறன்மிகு நிர்வாகம். அதைத்தான் நான் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். மாவட்ட நிர்வாகம் என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அமைப்பாகும். எல்லாத் திட்டங்களும் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை எந்தளவுக்கு விரைவாக சென்றடைகிறது என்பது உங்கள் திறமையை பொறுத்தது. நீங்கள் நல்ல திறமைமிக்க அலுவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள். அவர்களின் பாராட்டினை பெறும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள். அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 14 பேருக்கு நினைவுப்பரிசு நிகழ்ச்சியின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். திண்டிவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரா.பாண்டியன், மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் பெ. சிவக்குமார், விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஹாதீஜா பீபி, திண்டிவனம் வேளாண்மை அலுவலக உதவியாளர் ந.ஆறுமுகம், விழுப்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, விருத்தாச்சலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் து. நாகேஸ்வரன், புவனகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி. வேளாங்கன்னி, கடலூர் மாவட்டம் பெரியநெசவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்.பத்மஸ்ரீ, சிதம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமச்சந்திரன், கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் ஆர்.மணிகண்டன், புதுநகர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோ.நடராஜன் ஆகியோர் விருது பெற்றவர்கள் ஆவர். பங்கேற்றவர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, க. பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close