fbpx
Others

பிரதமர் மோடி இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் யூடியூப் டிரெண்டிங் வீடியோ

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சூழலில், இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேற்று காலையில் சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, பின்பு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன. இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். பெண்களின் பாதுகாப்பு, அடுத்த 25 வருடங்களுக்கான இந்தியாவின் இலக்கு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார். இந்த நிலையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடி ஆற்றிய உரை உலகளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. பிரதமர் மோடி நேற்று செங்கோட்டைக்கு கம்பீரமாக வந்து முப்படைகளின் மரியாதையை ஏற்ற வீடியோவும் , இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய வீடியோவும் யூடியூப்பில் முதல் இரண்டு டிரெண்டிங் வீடியோக்களாக இன்று இருந்தன. பிரதமரின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் தேசிய கொடி ஏற்றும் வீடியோவை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதை தவிர பிரதமர் மோடி செங்கோட்டையில் குழந்தைகளுடன் உரையாடுவது குறித்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடியின் சுதந்திர தின வீடியோ

Related Articles

Back to top button
Close
Close