fbpx
Others

நீலகிரி மாவட்டஆட்சியர் கவனத்திற்க்கு…..

வாகன நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தவும், விபத்து ஏற்படாமல் தடுக்கவும், டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஊட்டியில் உள்ள பல டிராபிக் சிக்னல் கம்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் உபயோகமற்ற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊட்டியில் உள்ள பிரதான வீதிகளான சேரிங்கிராஸ் முதல் உதகை மத்திய பேருந்து நிலையம் வரையிலும் பல்வேறு பகுதிகளில் டிராபிக் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சேரிங்கிராஸ் சிக்னல் மட்டுமே உபயோகத்தில் இருந்து வருகிறது. உதகை கமர்சியல் சாலையில் அமைந்துள்ள சிக்னல்கள், மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ள சிக்கல்கள், மாரியம்மன் கோவில் மற்றும் மத்திய பேருந்து நிலையம் என ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் உபயோகமற்ற காணப்பட்டு வருகிறன.  இந்த சிக்னல்களை இணைப்பு கொடுத்து, உபயோகப்படுத்துவதன் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது   நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தோடுகிறது. இதனால், மாணவர்களும் அப்பகுதி மக்களும் மூக்கைபொத்திக்கொண்டுசெல்கின்றனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாதாள சாக்கடை கழிவுநீரானது அவப்போது, சாலை எங்கிலும் கட்டுக்கடங்காமல் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், காலை வேளையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையிலும், மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close