fbpx
Others

நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் கைது

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில்நீடாமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் கைது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நீடாமங்கலம் கீழத்தெருவில் வசித்து வரும் சந்தானராமன்(வயது 53) செயலாளராக பணிபுரிந்து வந்தார்.  மேலும் இந்த சங்கத்தின் எழுத்தராக ஒரத்தூரை சேர்ந்த வீரக்குமார், உரவிற்பனையாளராக அன்பழகன், நகை மதிப்பீட்டாளராக நீடாமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் பணியாற்றி வந்தனர் மோசடி இந்த சங்கத்தில் வங்கியின் கணக்குகள் தணிக்கையின்போது கடந்த 2014-2016-ம் ஆண்டுகளில் ரூ.21 லட்சத்து 71 ஆயிரத்து 200 வரை மோசடி நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சந்தானராமன் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசாரிடம், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராமசுப்பு புகார் அளித்தார்.  4 பேர் மீது வழக்கு புகாரின் பேரில் வணிக பொருளாதார குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்க செயலாளர் சந்தானராமன், சேமிப்பு கணக்குகளில் போலிச்சீட்டு வைத்து ரூ.4 லட்சம், பணம் எடுக்கும் சீட்டு வைத்து ரூ.1 லட்சம், கையொப்பம் இல்லாமல் ரூ.20 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்தது உள்ளிட்டவைகளில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவு இந்த நிலையில் 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அதில் சங்கத்தின் செயலாளர் சந்தானராமன் ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 593 டெபாசிட்டாக செலுத்த வேண்டும். மீதி உள்ள தொகையை மற்ற ஊழியர்கள் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில் 2018- ம் ஆண்டு சந்தானராமன் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார். ஐகோர்ட்டு உத்தரவை மதித்து எழுத்தர் வீரக்குமார், அன்பழகன், ஜெயராமன் ஆகியோர் நடந்து கொண்டனர். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் கோர்ட்டு விதித்த டெபாசிட் தொகையை செலுத்தாமல் கூட்டுறவு சங்க செயலாளர் சந்தானராமன் தலைமறைவாக இருந்தார். ஜாமீன் ரத்து இதுகுறித்து நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு, சந்தானராமனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சந்தானராமனை நாகப்பட்டினம் வணிக பொருளாதார குற்றவியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய அய்யா மற்றும் போலீசார் சென்னையில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். சிறையில் அடைப்பு கைது செய்யப்பட்ட சந்தானராமன் நேற்று நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி வரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சீதாலட்சுமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சந்தானராமன் மன்னார்குடி சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

Back to top button
Close
Close