fbpx
Others

நீடாமங்கலம் –இணையவழி சுற்றுச்சூழல்விழிப்புணர்வு போட்டி..


நீடாமங்கலம் மார்ச் 30
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் இணையவழி மூலம் பேச்சுப்போட்டியினை நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது இப்போட்டியில் சோனா பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி காடுகள் பயன்கள் என்ற தலைப்பிலும், இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி மாணவி கோபிலா மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை பற்றியும், காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சிசில் பேபியன் காற்று மாசுபாடு பற்றியும், அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நிவியா மஞ்சள் பை பயன்பாடுகள் பற்றியும், நல்லிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் பற்றியும் வடக்குத்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி விசாலி நீர் மாசுபாடு பற்றியும் சிறப்பாக பேசினர். இனிய வழி மூலம் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ ராமன் செயலர் ஜெகதீஷ் பாபு பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்து. இவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தனர். ஆசிரியர்களின் சிறப்பான முயற்சிக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close