fbpx
Others

தேனி – மதுரை ரயில்சேவையைபிரதமர்தொடங்கிவைத்தார்

தேனி – மதுரை 12 ஆண்டு களுக்குப் பிறகு ரயில் சேவையை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டம், மதுரை – தேனி அகல ரயில் பாதை திட்டத்தில் 27 – 05-2022 முதல் பயணிகள் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு காணோலிக்காட்சி மூலம் கொடியசைத்து திறந்து வைத்தார் இவ்விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகராசன், சரவணக்குமார்
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி நகர்மன்றத் தலைவர் ரேணுப் பிரியா, மற்றும் பா ஜ க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த இரயில் சேவை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் தேனியில் இருந்து சென்னைக்கு தற்போது இணைப்பு ரயில் மூலம் சேவை தொடங்கப்பட்டு உள்ளன வருங்காலங்களில் பயணிகளின் வருகையையொட்டி தேனி – சென்னைக்கு விரைவில் இரயில் சேவை தொடங்கப்படும் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் மதுரையில் இருந்து தேனிக்கு வந்த புதிய ரயிலை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன. இந்த ரயில் சேவையால் நீண்ட நாள் கனவு நிறைவேறியது மேலும் தேனி மாவட்ட வர்த்தக சங்கத்தினர் இந்த ரயில் சேவை யை மிகவும் வரவேற்றுள்ளனர் மேலும் மதுரைக்கு குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்ல முடியும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளன .REPORTER  AJIT

Related Articles

Back to top button
Close
Close