fbpx
Others

திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ:அண்ணாமலை வெளியிட்டார்.

திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ வெளியிட்ட தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, 2ஜி வழக்கில் ஆதாரங்களை மாற்றுவதற்கு, ரெய்டு குறித்த தகவல்கள் முன்கூட்டியே பகிரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக மீது ஊழல், முறைகேடுஉள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறிவருகிறார். மேலும், என் மண் என் மக்கள்பெயரில் நடைபயணம்உள்ளிட்ட பல்வேறு வகைகளில் திமுகவுக்குஎதிராக அரசியல் செய்துவரும் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ்என்ற பெயரில் ஊழல் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். கடந்தஆண்டு ஏப்ரலில் திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல்இடம்பெற்றிருந்தது. .அதனைத் தொடர்ந்து ஜூலைமாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில்,அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து திமுகஃபைல்ஸ் பாகம் மூன்று என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டுடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுவரை 3 ஆடியோக்களைஅண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ பதிவை அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுகஎம்பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசிஉரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகஅண்ணாமலைதெரிவித்துள்ளார். உரையாடலில் ஒரு வழக்கின்சோதனை தொடர்பாக பேசப்படுகிறது. ஆனால், அது தொடர்பான முழு விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எக்ஸ் வலைதள பதிவில் அண்ணாமலை, “2ஜி வழக்கின் முக்கிய குற்றவாளிஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள்ளோம்.2ஜி ஊழலில் திமுகவின்முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத்தலைமையின் தலையீடு, முக்கிய ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கவோ, மாற்றவோ முடியும் என்பதற்காக ரெய்டு பற்றிய முன்கூட்டிய தகவல் பகிரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close