fbpx
Others

தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2024 — 2025 விளக்கம்….

இலங்கைத் தமிழர் நலனுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்த 1,291 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; விரைவில் 2ம் கட்ட பணிகளும் முடிக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிக்கு மத்திய அரசு நிதி வழங்காததால், மொத்த செலவையும் மாநில அரசு செய்து வருகிறது; இந்தாண்டு ரூ.9,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.வேளாண்மை, சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; கடந்த ஆண்டை விட 14% அதிகம்.கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.20 கோடி செலவில் 10 சிறிய ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும்; ரூ. 25 கோடி செலவில் தொழில்நுட்ப சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.கன்னியாகுமரி, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தூண்டில் வளைவு மீன் இறங்குதளம் ரூ. 450 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு.சுற்றுலா வளர்ச்சிக் குழுமங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படும்.மீன்பிடி தடைக்கால மானியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்துள்ளது; தெருநாய்களின் இனப்பெருக்க தடை திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.    ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு இணைய வசதிகளை செயல்படுத்த ரூ.3,206 கோடி ஒதுக்கீடு.ரூ.10 கோடி மானியம் பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை புனரமைக்க வழங்கப்படும்.சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,429 கோடி ஒதுக்கீடு.நகர்ப்புற பகுதிகள், ஊரகப்பகுதிகள், ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.ரூ.100 கோடி மதிப்பில் 120 சமூகநலக்கூடங்கள் கட்டப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு.சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.  பல்லுயிர்களை பாதுகாக்க முதற்கட்டமாக 5 கோடி ஒதுக்கீடு; செங்கல்பட்டில் 137 ஹெக்டேர் பரப்பளவில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும்.பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்திற்கு 10% ஊதிய மானியம் வழங்கப்படும்.வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்; சிற்றுந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.ரூ.1,100 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மைக்கப்டும்.கல்லணை கால்வாயை நீட்டித்தல் மற்றும் புனரமைப்பதற்கு ரூ.400 கோடி மதிப்பில் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதன்மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.அரசுசார் இணைய வழி சேவைகளை மேலும் துரிதமாகக் கொண்டு செல்ல, எல்காட் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்.1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.மதுரையில் தொழில் புத்தாக்க மையம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.மதுரையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.“சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் இலவச Wifi சேவை வழங்கப்படும்-தங்கம் தென்னரசு, நிதியமைச்சர்.

Related Articles

Back to top button
Close
Close