fbpx
Others

சென்னையில் TUJ கவன ஈர்ப்பு கருத்தரங்கம்.

  • ஆரணியில் நடைபெற்ற தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில நிர்வாக குழு கூட்டத்தில் முடிவுதமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில நிர்வாக குழு கூட்டம் 25, 26 (சனி ஞாயிறு) ஆகிய இரண்டு தினங்களில் ஆரணி அம்மையப்பர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்டங்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் பத்திரிக்கையாளர் சங்க தொழிற்சங்க பிரதிநிதிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அதில் உள்ள குறைபாடுகளையும் நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும், அது குறித்த ஆரோக்கியமான ஆலோசனைகளையும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மற்றும் செய்தி துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து விரைவில் கோரிக்கை மனு வழங்குவது. இதுவரை மாநில துணைப் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றிய திரு ஆர் வளையாபதி புதியதாக மாநில துணைத்தலைவராகவும், இதுவரை தலைமை நிலைய செயலாளராக சிறப்புடன் பணியாற்றி வந்த திரு பி ஆர் வேளாங்கள் மாநில அமைப்பு செயலாளராகவும், சிறப்பாக பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு முருககனி மாநில இணை செயலாளராகவும், வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் நிர்வாக குழு உறுப்பினர் ஏ ஆர் லட்சுமணன் மாநில இணை செயலாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினராகி மாநில அடையாள அட்டை பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினால் அவர்களுக்கு மாநில சங்கம் சார்பில் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவி தொகையாக ரூபாய் 10,000/- வழங்க இக்கூட்டம் அனுமதி அளிக்கிறதுநிலுவையில் இருக்கும் வழக்கு குறித்த பொய் பிரச்சாரங்களை முறியடிக்க உண்மை நிலையை அனைவருக்கும் புரிய வைக்கும் விதமாகவழக்கறிஞர்மூலம்பொதுஅறிவிப்பு,பத்திரிகைகளின்மூலம்விளம்பரதரவேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
    முடிவில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்..

 

Related Articles

Back to top button
Close
Close