fbpx
Others

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தேனிஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி

Greetings from Indian Red Cross Society,Theni District.வணக்கம்.
இன்று (26.06.2023) சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வு – 1:ஸ்ரீரங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.   நிகழ்வு-2:தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் காவல்துறையுடன் இணைந்து கோடைப் பொருள் ஒழிப்பு தினம் கருத்தரங்கு நடத்தப்பட்டது

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர்கள் திருமதி.பாக்கியலட்சுமி மற்றும்.முத்துக்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ரெட் கிராஸ் செயலர் திரு.சுருளிவேல் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு குறித்து விளக்கினார்.நிகழ்வு-3:கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப் பள்ளியில் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கம்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் குழு இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்வு-4:உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினருடன் இணைந்து போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.  நன்றி

Related Articles

Back to top button
Close
Close